×

கள்ளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் மக்கள் கோரிக்கை

கரூர்,மே 29:  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகதார நிலையத்திற்கு தினமும் சிகிச்சைக்காக நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் வந்துசெல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள், 50பேர் வரை வாரம் ஒருமுறைவந்து பரிசோதனை செய்து கொண்டு செல்கின்றனர்.இந்த சுகாதார நிலையத்தில் இரண்டு டாக்டர்கள் மட்டும் உள்ளனர். ஒருவர் விடுப்பு எடுக்க நேரிடும்போது ஒருவர் மட்டுமேஅனைத்து நோயாளிகளையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது. இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது போன்ற சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctors ,Kallapalli Primary Health Center ,
× RELATED கோவை சாய்பாபா காலணி பகுதியில் 2...